;
Athirady Tamil News

ஒரே நாளில் ஆயிரத்து 500 பேர் – கொரோனாவின் பிடியில் அமெரிக்கா..!!!

0

உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 18 லட்சத்து 51 ஆயிரத்து 734 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 14 ஆயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரத்து 286 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 179 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்த நபரை வைத்திருக்கும் சவப்பெட்டி

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை கடந்து தற்போது அமெரிக்காவில் நிலைகொண்டுள்ளது.

உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 22 ஆயிரத்து 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 528 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*