கொரோனா பாதிப்பு பற்றி வைரலாகும் ரத்தன் டாடா கருத்துக்கள்..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட இருக்கும் பொருளாதார நெருக்கடி சூழல் பற்றி வல்லுநர்கள் வெளியிட்ட கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறான பதிவு ஒன்றை ரத்தன் டாடா பதிவிட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவு வைரலாகியுள்ளது.
ஆய்வு செய்ததில், வைரல் பதிவினை ரத்தன் டாடா பதிவிடவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வைரல் தகவலில் உள்ள பதிவையோ அல்லது தொகுப்பையோ ரத்தன் டாடா எழுதவில்லை என டாடா டிரஸ்ட் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
வைரல் பதிவு பற்றிய இணைய தேடல்களில், இதே கருத்துக்கள் அடங்கிய செய்தி தொகுப்பு காணக்கிடைத்தது. எனினும், அந்த செய்தி தொகுப்பில் பதிவினை ரத்தன் டாடா எழுதியதாக குறிப்பிடப்படவில்லை. இந்த செய்தி தொகுப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
வைரல் தகவல் டாடாவின் சமூக வலைதள கணக்குகள் மற்றும் இதர செய்தி நிறுவனங்கள் என எதிலும் காணப்படவில்லை. அந்த வகையில் வைரல் பதிவினை ரத்தன் டாடா பதிவிடவில்லை என்பது உறுதியாகி விட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள ரத்தன் டாடா இதுவரை ரூ. 500 கோடி நிதியுதவியும், டாடா சன்ஸ் சார்பில் ரூ. 1000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.