;
Athirady Tamil News

ஆமதாபாத் நகராட்சி அதிரடி – முக கவசம் அணியாவிட்டால் 3 ஆண்டு சிறை..!!

0

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து சிலர் அதை கடைப்பிடிப்பதில்லை. இதனால் பல மாநில அரசுகள் அதை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்து வருகிறது.

இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகராட்சியும், வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. இதை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் ஆமதாபாத் நகராட்சி அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − fifteen =

*