;
Athirady Tamil News

கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போதும் – பவித்ரா..!!

0

இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் ” கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போதுமானதாக இருக்கும், ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ” கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறான நிலைமைகள் முன்னெடுக்கப்படும் என்பதற்கு பதில் தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறுகையில்,

மிகவும் கடினமான கால கட்டத்தில் நாம் இன்று முகங்கொடுத்து வருகின்றோம். நாளாந்தம் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

எனினும் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் தவிர்ந்து ஏனையவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படாத வண்ணமே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் மக்களை பாதுகாக்க எடுத்த வேலைத்திட்டத்தின் பிரதிபலன் என்றே கூற வேண்டும்.

எவ்வாறு இருப்பினும் இப்போது நாம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நாம் முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் வெகு சீக்கிரமாக இந்த நிலைமைகளில் இருந்து விடுபட முடியும். எவ்வாறு இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் வெளி மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என்ற நிலைப்பாடும் உள்ளது.

ஆகவே அடுத்த இரண்டு வார காலம் மக்கள் எமக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என்றார்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலானது குறைந்ததாக கருத முடியாது. ஆனால் நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களின் மூலமாக நிலைமைகளை இன்றுவரை கட்டுபாட்டில் வைத்திருகின்றோம்.

ஆகவே இதே நிலைமை மேலும் இருவார காலமேனும் தொடர வேண்டும். அவ்வாறு கடுமையான சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் நாட்டின் நிலைமைகளை சரிசெய்ய முடியும்.

ஆகவே அடுத்த இரண்டு வாரகாலம் சுகாதார வேலைத்திட்டங்களை மிகச் சரியாக முன்னெடுத்தால் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நாட்டில் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவர முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செய்து வருகின்றோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் 32 நபர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு !!

வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது !!

வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு!!

இம்முறை புத்தாண்டு பண்டிகையை அகத்தினுள் பிரார்த்தியுங்கள் – ஆறு திருமுருகன்!!

இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம்!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 200 ஐ கடந்தது!!

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!!

4,600 கிராம மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை ஆராய்ந்த இராணுவ தளபதி!!

கொரோனாவின் பேயாட்டம்.. கொத்துக்கொத்தாக மரணம், உலகிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்தாக நாடானது அமெரிக்கா !! (வீடியோ, படங்கள்)

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு!!

“கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில், சுவிஸில் நடைபெற்ற “பெரியவெள்ளி” ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு!!

அரச உத்தியோகத்தருக்கு சமுர்த்தி கொடுப்பனவு!!

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது கட்டாயம்!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு!!

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் இருக்கின்றோம் – வைத்தியர் ஏ.லதாகரன்!!

யாழ்ப்பாணம், மன்னாரைச் சேர்ந்த 10 பேருக்கு பரிசோதனை – தொற்று இல்லை!!

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !!

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கை தளர்த்த பரிசீலனை!!

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 50 பேர் குணமடைந்தனர்!!

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் கைது!!

உள்ளுராட்சி சபைகளின் நிதியில் நிவாரணங்கள் வழங்க முடியாது – ஆளுனர் !!

மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கம்!!

தலைமறைவான வட மாநில கொரோனா வாலிபர் நிதின் சர்மா.. தேடப்படும் நபராக அறிவித்தது விழுப்புரம் நிர்வாகம்!! (வீடியோ, படங்கள்)

அமெரிக்காவில் கொரோனாவுக்கு.. கருப்பர் இனத்தவரே அதிகம் பலி.. காரணம் என்ன.. அதிர வைக்கும் தகவல்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் கொரோனா சந்தேகத்தில் யாழிற்கு அனுப்பிவைப்பு!!

விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி !!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 8 =

*