ஈஸ்வரி அம்மா என்றொரு தீபம்.. -புளொட் (அஞ்சலிக் கவிதை)

ஈஸ்வரி அம்மா என்றொரு தீபம்
இறைவனடி சேர்வதற்காய் அணைந்தது
ஈழத்து தமிழ் மக்கள் பட்ட துயரினை
இதயத்திலேந்தி உதவிட்ட ஓரன்னை
அண்ணன் கமலபாஸ்கரனின் வாழ்வில்
அருந்துணையாய் வந்திணைந்து
ஆன்மீகத் தேடலில் ஆழ்ந்திறங்கி. திரு
அண்ணாமலயார் புகழுரைத்த நங்கை
ஆங்கிலேயாராகப் பிறந்தும் எம் தமிழில்
ஆழ்ந்த பற்றுக் கொண்டு ஈழத்தமிழர்
துயர்துடைக்க கணவருக்கு துணையானார்
துணிவோடு தோழருக்கு துணை நின்றார்
ஆதிமுதல் தமிழீழப் போராட்டத்தில்
அடிப்படையாய் நின்ற தோழர் கமலபாஸ்கரன்
அவரோடு சேர்ந்திந்த அம்மாவும் எமக்கு
அருஞ்சேவை ஆற்றிட்டார் அறிவோம் நாம்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்
தனித்தன்மை வாய்ந்த பிரச்சார்ப் பீரங்கியாக
தன்குரல் கொண்டு பல படைப்புத் தந்து
தலைவர் முகுந்தன் வளர்ச்சிக்கு உதவினார்
பிரித்தானிய இந்து சங்கத்தின் ஆரம்பம் முதல்
பலகாலம் அரும்பெரும் பணியாற்றினார்
பாரினை ஆட்டிடும் கொரோனாவின் காரணம்
மரணச்சடங்கில் பங்களிக்க முடியா நிலை
இங்கிலாந்து மண்ணில் இடர் சூழ்ந்த இக்காலம்
இதயத் துடிப்பை நிறுத்தி இறையுலகம் எய்தி
மறைந்த திருமதி ஈஸ்வரி கமலபாஸ்கரனுக்கு
மனமாரந்த அஞ்சலிகளை செலுத்துகின்றோம்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
இங்கிலாந்து
திருமதி கமலபாஸ்கரன் ஈஸ்வரி லண்டனில் காலமானார்..! (அறிவித்தல்)