;
Athirady Tamil News

புங்குடுதீவில் பொலிசாரின் அதிரடியில் சிக்கியது, சாராயப் போத்தல்கள்… பிரபல சாராய வியாபாரி கைது! (படங்கள் & வீடியோ)

0

புங்குடுதீவில் பொலிசாரின் அதிரடியில் சிக்கியது, சாராயப் போத்தல்கள்… பிரபல சாராய வியாபாரி கைது! (படங்கள் & வீடியோ)

போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று முற்பகல் 11மணியளவில் ஆலடிச்சந்திக்கு அண்மையில் உள்ள வீட்டில் சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தகவல் கிடைத்தயிட்டு ஊர்காவற்றுறை பொலிசாரால் அதிரடியாக உள்நுளைந்து விற்பனைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ரூபா பெறுமதியான மதுப்போத்தல்களையும் சந்தேக நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் செல்வரெத்தினம் செல்வகுமாரன் “சொக்கன்” அல்லது “சாமியார்” என்றும் அழைக்கப்படுபவர் (புங்குடுதீவு 10) தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சுவிஸ் பிரமுகர்களின் பின்னணியில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி சம்பவம் நடைபெற்ற வீடானது, சுவிஸில் உள்ள அரசியல் பின்னணியில் செயல்படுபவரின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச்செயலானது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகையே உலுக்கி உயிரிழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப் பட்டிருக்கும் நேரத்தில், பலர் நிவாரப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது, பொறுப்பற்ற சில சாராய அடிமை (சாராய நக்கிகள்)களால் இவ் இழிசெயலைச் செய்ய எவ்வாறு இவர்களுக்கு மனம் வருகிறது? என விசனம் அடைகின்றனர் அப்பகுதி மக்களும், சமூக நல ஆர்வலர்களும்.

இதேவேளை மேற்படி சம்பவம் நடைபெற்ற வீடு, அங்கிருந்தோரின் புகைப்படம் எனப் பலவும் “அதிரடி” இணையத்துக்கு ஆதாரமாகக் கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், சிலரது வேண்டுகோளுக்கு இணங்க, வழக்கு விசாரணையைக் கருத்தில் கொண்டு “பிரசுரிக்காமல்” தவிர்த்து உள்ளோம்.

தேவையேற்படின் விரைவில் இவர்களை போன்ற சில்லறை மது வியாபாரிகளினதும், அவர்களின் பின்புலத்தில் இருந்து செயல்படுவோரினதும் புகைப்படங்களுடன் செய்திகள் பிரசுரிக்கப்படும் என்பதை அறிய தருகிறோம்.

§§§§ பிற்குறிப்பு…-

உலகையே உலுக்கி உயிரிழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு, நேற்றுமுன்தினம் முதல்முறையாக தளர்த்தப்படட போது, புங்குடுதீவில் மட்டுமல்ல, இலங்கையின் பலபகுதிகளில் பொதுமக்கள் “மதுபானசாலைக்கு” முன்னால் முண்டியடித்ததும், நீண்டவரிசையில் காத்திருந்து வாங்கி சென்றதையும் காணக் கூடியதாக இருந்தது.

இதேவேளை புங்குடுதீவு மதுபானசாலையில் நேற்றுமுன்தினம் மட்டும், பல இலட்சம் ரூபாக்களுக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதும், யாழ் சென்று நீண்டவரிசையில் நிக்க முடியாதென வேலணை, ஊர்காவற்றுறை போன்ற பகுதிகளில் இருந்தும் புங்குடுதீவு மதுபானசாலைக்கு சென்று கொள்வனவு செய்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

சிலதினங்களுக்கு முன்னர் “புங்குடுதீவில் எல்லாம் இருக்கு, கள்ளு வாங்க காசு மட்டும் தாருங்கள் புலம்பெயர் உறவுகளே” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டு ஒருவர், தனது முகநூலில் பதிந்த பதிவு, பலராலும் பகிரப்பட்ட நிலையில், அந்த பதிவை உண்மையாக்கும் வகையில் சிலர் நடந்து கொண்டது பலரையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

புங்குடுதீவில் ஏறக்குறைய 1300 குடும்பங்கள் உள்ள நிலையில், சுமார் 800 குடும்பங்கள் இலங்கை அரசின் சமுர்த்தி திட்டம் ஊடாக உதவி பெறும் நிலையில், புலம்பெயர் புங்குடுதீவு மக்களுக்கு “புங்குடுதீவின் புலம்பெயர் உறவுகளும், புங்குடுதீவில் உள்ள அமைப்புக்களும், பல அரசியல் கட்சிகள், அரசியல் பிரமுகர்களென பலரும்” சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேலாக நிவாரணம் வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது.

ஆயினும் “ஆளுக்காள் `தமது பிரதேசம்` என்ற வேறுபாட்டைக் களைந்து”, இதனை ஒன்றிணைந்து ஒரேகுடையின் கீழ் கொடுத்து இருந்தால், பலதவறுகளை தவிர்த்து இருக்கலாமென பலரும் அங்காலாய்ப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்… “அதிரடி” இணையத்துக்காக, “புங்கையூரான்” மற்றும் “நக்கீரன்” -புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 11 =

*