புங்குடுதீவில் வேட்டை தொடர்கின்றது.. சிக்கினார் பிரபல “சாராயச் சண்டியர்” நகுலன்..! (படங்கள்)

புங்குடுதீவில் வேட்டை தொடர்கின்றது.. சிக்கினார் பிரபல “சாராயச் சண்டியர்” நகுலன்..! (படங்கள்)
இருதினங்களுக்கு முன்னர், ஆலடிச்சந்திக்கு அண்மையில் உள்ள வீட்டில் சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையிட்டு ஊர்காவற்றுறை பொலிசாரால் அதிரடியாக உள்நுளைந்து விற்பனைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ரூபா பெறுமதியான மதுப்போத்தல்களையும் சந்தேக நபரையும் கைது செய்தனர். இதன்போது, கைது செய்யப்பட்டவர் செல்வரெத்தினம் செல்வகுமாரன் “சொக்கன்” அல்லது “சாமியார்” என்றும் அழைக்கப்படுபவர் (புங்குடுதீவு 10) தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சுவிஸ் பிரமுகர்களின் பின்னணியில் பிணையில் விடுவிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.
இந்நிலையில் நேற்று இரவு சமூகநல ஆர்வலர்களுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த நபரின் வீட்டைச்சூழ தீவிர கண்காணிப்பில் வைத்திருந்து ஊர்காவற்றுறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. துரிதமாக செயற்பட்ட பொலிசார் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நகுலன் சபாரெட்ணம் நகுலேஷ்வரன் (நகுலன் புங்குடுதீவு 10ம் வட்டாரம் ) என்பவரைக் கைது செய்ததோடு பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான சாராயப் போத்தல்களையும் கைது செய்தனர்.
இவரது சகாக்களான ஆலடிச்சந்தி கள்ளமண் புகழ் கேதீஸ் (அத்தான்), தம்பர்கடை மூர்த்தி, வட்டி ஜீவா ஆகியோர் தப்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நகுலன் என்பவர் வவுனியா நகரத்தில் பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து தலைமறைவாகி, புங்குடுதீவில் குடியேறியுள்ளார். இங்கும் கடலுணவுகள் ஏற்றுமதி செய்யும் நிறுவன வாகனச் சாரதியாக வேலை செய்தார்.
இதன்போது மாடுகளை களவாடி இறைச்சியாக்கி மீன் பெட்டிக்குள் கடத்தி யாழ்ப்பாணம் வவுனியா முஸ்லீம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபமீட்டி வந்தார்.
இந்த கபடத்தனம் தெரியவரவே, நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார் பின்னர் ஆலடிச்சந்தியில் கடையொன்றை வாடகைக்கு அமர்த்தி பலசரக்குக் கடை நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(§§§ இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள், சமூகநல ஆர்வலர்கள் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய மிகவிரைவில் “அதிரடி” இணையம் ஊடாக சம்பந்தப்பட்டோர், அவர்களுக்கு பின்புலமாக புங்குடுதீவிலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்து செயல்படுவோர் குறித்து விபரம் பகிரங்கத்தில் வெளியாகும். தேவையேற்படின் சம்பந்தப்பட்ட அனைவரின் புகைப்படங்களும், “அதிரடி” இணையத்தில் பிரசுரிக்கப்படும்.)
தகவல் & படங்கள்… “அதிரடி” இணையத்துக்காக, “புங்கையூரான்” மற்றும் “நக்கீரன்” -புங்குடுதீவு.