;
Athirady Tamil News

‘சர்வாதிகாரப் போக்குக்கு மஹிந்த ஒத்துழைக்கிறார்’ !!

0

நாடாளுமன்றத்தை மீள கூட்டாது ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வாதிகரமாகச் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சுமத்திய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியின் அரசமைப்புக்கு எதிரான சர்வாதிகார செயற்பாடுகளுக்கு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கடுமையாகச் சாடினார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, பழைய நாடாளுமன்றம் எந்நேரத்தில் வேண்டுமானாலும் கூடுமென தேர்தல் ஆணைக்குழுவிடம் எதிர்கட்சியினர் அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுமென திகதி குறிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சுயாதீன தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் ​வௌளியிட்டதன் பின்னர் அரசியற் கட்சியின் தலைவர்கள், செயலாளர்களை அழைத்து, தேர்தல் செயலகத்தில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடியிருந்தது என்றார்.

இக்கலந்துரையாடலின்போது ஜூன் மாதம் 02ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பது, அப்படமான அரசமைப்பு மீறல் என்பதை தாம் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதேவேளை “ஏற்கனவே திகதி குறிக்கப்பட்டதுபோல ஜூன் மாதம் 02ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடியாத நிலையேற்படுமெனவும், இதனால் ​அரசமைப்பின் முக்கியமான ஏற்பாடுகள் மீறப்படுகின்ற நிலைமை உருவாகி, பாரிய அரசமைப்புக் குளறுபடிகள் ஏற்படுமென்பதைச் சுட்டிக்காட்டி இதுத் தொடர்பில் உயர்நீதிமன்றின் அபிப்பிராயத்தைக் கோர வேண்டுமென ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

எனினும் ஆணைக்குழுவின் கோரிக்கையை மறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, பொதுத்தேர்தலை நடத்துவதற்கான மற்றுமொரு திகதியை குறிக்க வேண்டுமென அழுத்தங்களைப் பிரயோகித்து ஜனாதிபதியின் செயலாளரினூடாக ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதேவளை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் ஒருமாதக் காலமாக நிதிறையில் இருந்துவிட்டு திடிரென எழுந்தவர்போல, திகதி குறிப்பிடப்படாமல் பொதுத்தேர்தலை ஒத்திவைத்திருப்பது தவறானதெனத் தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழுத்ததைப் பிரயோகிக்கும் வகையில் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் பிரதமரும் தங்களுக்குள்ள அதிகாரங்களைப் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் குற்றஞ்சுமத்திய அவர், ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியின் பிறந்தநாளான ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பது, அரசமைப்பின் 70ஆம் உறுப்புரையின் 03ஆம் உப உறுப்புரிமைக்கு எதிரானதெனவும் தெரிவித்தார்.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதனூடாக பழைய நாடாளுமன்றம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் ப​ழைய நாடாளுமன்றம் கூடுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கூட்டாது, ​அரசமைப்புக்கு விரோதமாக சர்வாதிகாரமாக செயற்படுகிறார். இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கின்ற நிலையில், அமைச்சர்களும் அவர்களது பிரதிநிதிகளும் தங்களுக்கு விரும்பியவாறு ஊரடங்கு அனுமதிப் பத்திரங்களைப் பெற்று தேர்தல் விதிமுறைகளை மீறிவருவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதியின் செயலணியின் தலைவராக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருப்பதும் தவறென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 20 =

*