;
Athirady Tamil News

கொரோனாவின் கோரப்பிடியில் மும்பை- 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழப்பு..!!!

0

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1783 ஆக உயர்ந்துள்ளது. 15,266 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 16758 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1233 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 26 பேர் உள்பட மொத்தம் 34 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 651 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் இதுவரை 412 பேரும், புனேயில் 122 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*