;
Athirady Tamil News

வவுனியாவில் சித்திரா பௌர்ணமி விசேட பூஜை வழிபாடுகள்! (படங்கள்)

0

இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான சித்திரா பௌர்ணமி தினமான இன்று வவுனியா கருமாரி அம்மன் கோயிலில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளில் விசேட அபிசேகங்களும் பூசைகளும் இடம்பெற்றிருந்தன.

அமரத்துவமடைந்த தாயை எண்ணி விரதமிருந்து அந்த ஆத்மாவிற்காக பூசை நடத்தி தமது கடமைகளை நிறைவேற்றுவது இந்த தினத்தின் விசேடமாகும். அந்த வகையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்திலும் விசேட பூசைகள் இடம்பெற்றிருந்தன.

ஊரடங்குச் சட்டம் காரணமாக பலரும் ஆலயத்திற்கு வருகைதராவிட்டாலும் ஆலயத்தின் அருகில் உள்ளவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ஆலயத்திற்கு வரமுடியாதவர்களுக்காக தமிழ் விருட்சம் அமைப்பின் மூலம் விசேட மோட்ச அர்ச்சனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*