வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!

நாட்டில் 390 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 கடற்படைச் சிப்பாய்களும் 82 அவர்களுடன் தொடர்புடையவர்களும் என கோவிட் -19 தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட 27 பேரில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 24 பேர் அடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 308 கடற்படைச் சிப்பாய்களில் 16 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
சலூன்களை சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு ஆலோசனை!!
கொழும்பில் சிக்கியுள்ளவர்களில் 600 பேரை இன்று சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மேலும் ஒருவர் பலி !!