கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

கோவிட் – 19 தொற்று நோயை இலங்கையிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க நீண்ட காலம் எடுக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
“கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டைத் திறப்பதன் மூலம் கொரோனா ஆபத்து குறைந்துவிட்டது என்று கருதுவது தவறு. இது நீண்ட காலம் எடுக்கும்” என்று மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
நாளை (11) நாடு வழமைக்குத் திரும்பிய பின்னர் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் நாடு செயல்பட்டு வந்த விதத்தை மனதில் வைக்காமல் கோவிட் -19 நோய் பரவல் காலகட்டத்தில் உள்ள நடைமுறைகளைத் தொடர்வது மிகவும் முக்கியமாகும்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமீபத்திய காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளும் உத்தரவுகளும் நடைமுறையில் உள்ளன.
அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், பெரிய மற்றும் சிறு வணிகங்கள், போக்குவரத்து சேவைகள் உள்பட முழு சமூகமும் நாளை முதல் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருப்பது முக்கியம். சமீப காலங்களில், அதை எப்படி செய்வது என்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரைகள் நடந்துள்ளன.
எதிர்காலத்தில் எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றிய தகவலையும் தெரிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.
நீங்கள் சுவாச நோய்த்தொற்றுகள், குருதிக்கசிவு, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், கோரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க நாடுமுழுவதும் உள்ள 30 சிறப்பு மருத்துவமனைகளில் அமைந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட விடுதி வளாகங்களுக்குள் நுழையலாம் அல்லது 1390 அல்லது 1990 ஐ அழைக்கவும் – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)
சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!
அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!
முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!
மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!
PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!