;
Athirady Tamil News

சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..! (வீடியோ, படங்கள்)

0

கொரோனா வைரஸ் தோற்றம் சீனாவாக இருந்தாலும், அதனால் பாதிப்பு என்னவோ மற்ற உலக நாடுகளுக்கு தான் அதிகம். அதிலும் இன்று அதிகம் பாதிக்கப்பட்ட நம்பர் 1 நாடாக இருப்பதும் அமெரிக்கா தான். இப்படி உலகம் முழுவதினையும் தனது வலுவான தாகக்கத்தினால் உலுக்கி வரும் கொரோனாவால், ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையே பிரச்சனை இருந்தாலும், அது தற்போது மேலும் வலுத்து வருகிறது எனலாம். எதற்கெடுத்தாலும் அமெரிக்கா சீனாவுடன் போட்டி போடுவதும், சீனா அமெரிக்காவுடன் போட்டி போடுவதும், முதல் இரு பொருளாதார நாடுகளின் வழக்கமான ஒன்று தான்.

இரகசிய தகவல்கள் திருட்டு

ஆனால் இது தற்போது கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்திலும் கூட விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது எனலாம். ஏனெனில் கொரோனா வைரஸூக்கான தடுப்பூசி மருந்து குறித்தான இரகசிய தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்காவின் US Federal Bureau of Investigation and cybersecurity experts நம்புவதாக அமெரிக்கா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தடுப்பூசி குறித்த போட்டி

இரு பெரும் வல்லரசுகளும் எதற்கெடுத்தாலும் போட்டி போட்டு வருவது பல காலமாக நடந்து கொண்டு வருவது தான் என்றாலும், கொரோனா தடுப்பு மருந்து விஷயத்தில் இப்படி சண்டை போட தொடங்கியுள்ளது சற்று கவலையை ஏற்படுத்துள்ளது எனலாம். கோவிட் -19-க்கான தடுப்பூசியை உருவாக்க இரு அரசுகளும் போட்டியிடுவதால், சீனா ஹேக்கிங் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட FBI மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளன.

எச்சரிக்கை வரலாம்

அதுமட்டும் அல்ல கொரோனா வைரஸ் குறித்தான சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் குறித்த தகவல்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை ஹோக்கர்கள் குறி வைக்கின்றனர். மேலும் இந்த ஹேக்கர்கள் சீன அரசுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் இது குறித்த எச்சரிக்கை குறித்தான தகவல்கள் விரைவில் வெளியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா நிராகரிப்பு

ஆனால் பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ விஜியன் இது குறித்தான குற்றச்சாட்டினை நிராகரித்துள்ளார். மேலும் அவர் அனைத்து இணைய தாக்குதல்களையும் எதிர்ப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியில் நாங்கள் உலகை வழி நடத்துகிறோம். ஆக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சீனாவை வதந்திகள் மற்றும் அவதூறுகளால் குறிவைப்பது ஒழுக்கக் கேடானது என்று ஜாவோ கூறினார்.

சீனாவினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்

ஆனால் இது குறித்து அமெரிக்க டொனால்டு டிரம்ப் அவற்றை உறுதிப்படுத்தவில்லை. எனினும் நாங்கள் சீனாவினை மிகக் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று டிரம்ப் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோங்க, மக்கள் இங்கு கொரோனாவால் அவதிப்பட்டு வரும் நிலையில், எப்படியேனும் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாதா?, விரைவில் இதற்கும் மருந்து கிடைக்காதா? என்று ஏங்கி வரும் நிலையில், இதிலும் சண்டையிட்டு கொள்ள ஆரம்பித்துள்ளதை என்னவென்று சொல்வது?
இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!

கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

‘சரியான பாதையில் இலங்கை’ !!

’நாட்டுக்குள் டயஸ்போராவினர் நுழைய முடியாது’ !!

’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!

நேற்று பதிவானோரில் 13 பேர் கடற்படையினர் !!

நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!

மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்கு !!

இதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரண குணம்!!

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா!!

4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்!!

PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*