;
Athirady Tamil News

அப்பா ஜெயபாலை திட்டுனா ஜெயஸ்ரீ எங்ககூட சண்டைக்கு வரும்..அதான் தீவைச்சு எரிச்சோம்.. ஷாக் வாக்குமூலம்!! (வீடியோ, படங்கள்)

0

“நாங்க ஒரு அரசியல் கட்சில இருக்கோம்ணு தெரிஞ்சும் கொஞ்சம் கூட பயம் இல்லாம எங்ககிட்ட எதிர்த்து பேசுவான் அந்த ஜெயபால்.. அப்போ நாங்க ஜெயபாலை திட்டினா, இந்த ஜெயஸ்ரீ பொண்ணு எங்கள திட்டும்.. அதான் அவமேல எங்களுக்கு கோபம்.. அந்த பொண்ணு பெட்டிக்கடையில தனியா கடைல இருந்துச்சு. நாங்க நேரா போயி ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி வீட்டுக்குள்ள இழுத்து போயி.. தீ யை வெச்சோம்” என்று விழுப்புரம் சிறுமியை கொன்றவர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர்.

தமிழகத்தை புரட்டி போட்டு நிலைகுலைய வைத்துள்ளது 15 வயது சிறுமி ஜெயஸ்ரீயின் மரணம்.. முன் விரோதம் காரணமாக நடந்த கொலை.. திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியை சேர்ந்த தம்பதி ஜெயபால் – ராஜியின் மகள்தான் ஜெயஸ்ரீ.

விவசாயி கூலி செய்து வரும் ஜெயபால், வீட்டிலேயே ஒரு சிறிய பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார். இவர்களுக்கு முருகன், கலியபெருமாள் என்ற உறவினர்களுடன் முன்விரோதம் இருந்துள்ளது.. அது சம்பந்தமாக தகராறு இருந்தும் வந்துள்ளது.. அதனால் இருவர் மீதும் புகார் கொடுக்க ஜெயஸ்ரீ பெற்றோர் போலீஸ் ஸ்டேஷன் சென்ற சமயம்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.

மண்ணெண்ணை

பகையாளிகள் வீட்டிற்குள் நுழைந்து ஜெயஸ்ரீயை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டனர்.. 95 சதவீத காயத்துடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றும் ஜெயஸ்ரீயை காப்பாற்ற முடியவில்லை.. அந்த நிலையிலும் ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலம்தான் இந்த வழக்கின் போக்கை துரிதமாக்கியது.. “அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) என் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க.. என் அப்பன் எங்கே? என்று ஜெயஸ்ரீ கதறியது இன்னும் யார் மனதையும் விட்டு அகலவில்லை.

2 பேரும் கைது

உடனடியாக முருகன், கலியபெருமாள் கைதாகி உள்ளனர்.. இருவரும் அதிமுக பிரமுகர்கள் என்பதால், எளிதாக வழக்கு தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்று அனைத்து தலைவர்களுமே வலியுறுத்தி உள்ளனர்.. இருவரையும் அதிரடியாக கட்சியை விட்டு தூக்கியது அதிமுக.. முதல்வர் ஜெயஸ்ரீ மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தேசிய குழந்தைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது.

வாக்குமூலம்

சிறுமியை கொன்ற இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. முருகனுக்கு 50 வயது.. கலியபெருமாளுக்கு 61 வயது… அவர்கள் அளித்த வாக்குமூலம் இதுதான்: “எங்களுக்கும் ஜெயபால் குடும்பத்துக்கும் 7 வருஷமா பகை இருக்கு.. நாங்க 2 பேரும் ஒரு அரசியல் கட்சில இருக்கோம்ணு தெரிஞ்சும் கொஞ்சம் கூட பயம் இல்லாம எங்ககிட்ட எதிர்த்து பேசுவான் அந்த ஜெயபால்.. இப்ப முருகன் வீட்டு பக்கத்துல இருக்க நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணி காசு பாக்குறான்.. இவன் எங்களுக்கு பயப்படாம இருக்க காரணம், பெட்டி கடை வச்சு சம்பாதிக்குறோம்றதுதான்.

ஜெயபால்

4 மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் அவனோட ஒரு பிரச்சனை வந்துடுச்சு.. ஜெயபாலையும், அவர் பொண்டாட்டிராஜியையும் அடிச்சிட்டேன்.. அப்பவும் போலீசுக்கு புகார் கொடுக்க போனான். நான் எப்போ ஜெயபாலை அடிச்சாலும் இந்த ஜெயஸ்ரீ பொண்ணு எங்கள திட்டும்… அதனால இவமேல எங்களுக்கு கோபம் அதிகமாக இருந்தது.. 2 நாளைக்கு முன்னாடியும் ஒரு பிரச்சனைக்கு நாங்கதான் காரணம்னு சொல்லி போலீஸ்ல புகார் தர போனாங்க.

கை, காலை கட்டினோம்

இந்த விஷயம் எங்களுக்கு தெரிஞ்சு இன்னும் எரிச்சலாயிடுச்சு. நேரா கடைக்கு போனோம்.. ஜெயஸ்ரீ தனியா கடைல இருந்துச்சு… ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வெச்சு அழுத்தி வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டுப் போனோம்… அங்க இருந்த ஒரு தூணில்தான் அவள் கை காலை கட்டி போட்டோம்.. பக்கத்துலயே மண்ணெண்ணெய் இருந்தது.. அதை எடுத்து அவ மேல ஊத்தி உயிரோட கொளுத்திட்டோம்” என்றனர்.

விழுப்புரம் சிறுமி கொலை.. தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை!! (வீடியோ, படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*