;
Athirady Tamil News

சீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ, படங்கள்)

0

சீனாவிலிருந்து உலகெங்கிலும் கொடிய கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனர்களின் தரப்பில் ஒரு பயங்கரமான தவறு நடந்திருக்க வேண்டும் அல்லது அநேகமாக அவர்களின் இயலாமையால் பரவி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று நோயாக மாறி உள்ளது. இதுவரை உலகில் 39 லட்சத்து 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2லட்சத்து 70 ஆயிரம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்காவில் 12லட்சத்து 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 77 ஆயிரம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 2129 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

சீனாவின் மீது கோபம்

இந்நிலையில் கொரோனா பரவ சீனாவின் அலட்சியமே காரணம் என்று அமெரிக்கா கடும் கோபத்தில் திட்டி வருகிறது. வுஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கொரோனா தோன்றி இருக்கலாம் என்று சந்தேகமும் அமெரிக்கா தெரிவித்தது. சீனா செய்தது மன்னிக்க முடியாத குற்றம், நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அமெரிக்கா கடுமையாக திட்டியும் கொக்கரித்தும் வருகிறது.

பொழுது விடிந்தால் போதும்

குறிப்பாக அதிபர் டிரம்ப் பொழுது விடிந்தால் சீனாவை திட்டாத நாள் இல்லை. ஏனெனில் அமெரிக்காவில் தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு கொத்துக்கொத்தாக பலியாவதை அவரால் தாங்க முடியவில்லை. இதுவரை மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மற்ற உலகின் எந்த நாட்டையும் விட அமெரிக்காவே தினமும் அதிகம் பேரை இழந்து வருகிறது.

இயலாமையால் பரவியது

இதனால் வேதனையின் உச்சத்தில் உள்ள டிரம்ப் நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கம் போல் சீனாவை பிடிபிடிஎன பிடித்து திட்டியவர், “சீனாவிலிருந்து உலகெங்கிலும் கொடிய கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனர்களின் தரப்பில் ஒரு பயங்கரமான தவறு நடந்திருக்க வேண்டும் அல்லது அநேகமாக அவர்களின் இயலாமையால் பரவி இருக்க வேண்டும். யாரோ ஒரு முட்டாள், அவர்கள் செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்யவில்லை. இது மிகவும் மோசமானது.

ஏதோ நடந்துள்ளது

இது (கொரோனா வைரஸ்) எந்த இடத்தில் தோன்றியதோ அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்க முடியும். அதை உருவான இடத்திலேயே தடுத்து நிறுத்தி அழித்திருக்க முடியும். அதைச் செய்வதும் சுலபமாகவே இருந்திருக்கும். ஆனால் ஏதோ நடந்துவிட்டது. நிச்சயம். ஏதோ நடந்துள்ளது” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சீனா மீது விசாரணை

இதற்கிடையே அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் கெவின் மெக்கெர்தி சீனாவிற்க எதிராக பணி குழுவை உருவாக்குவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது “கொரோனா வைரஸ் (கோவிட் 19) பற்றி நாம் மேலும் அறியும்போது, ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. சீனாவின் மறைப்பு இந்த நெருக்கடிக்கு நேரடியாக வழிவகுத்தது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நோயின் தீவிரத்தை மறைத்து, அமெரிக்காவைக் குற்றம் சாட்டும் பிரச்சாரத்திற்கு வழிவகுத்திருக்கிறது, எனவே சர்வதேச நிபுணர்கள் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..! (வீடியோ, படங்கள்)

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!

கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

‘சரியான பாதையில் இலங்கை’ !!

’நாட்டுக்குள் டயஸ்போராவினர் நுழைய முடியாது’ !!

’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!

நேற்று பதிவானோரில் 13 பேர் கடற்படையினர் !!

நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!

மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்கு !!

இதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரண குணம்!!

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா!!

4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்!!

PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*