;
Athirady Tamil News

கொரோனாவை உணர்த்தும் மற்றொரு மோசமான அறிகுறி! அசால்ட்டா இருக்காதீங்க… !! (வீடியோ, படங்கள்)

0

கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. நாளுக்கு நாள் கொரோனா வழக்குகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. அதோடு ஒவ்வொரு நாளும் கொரோனா குறித்த புதிய புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன.

அதோடு கொரோனா அடிக்கடி புதிய அறிகுறிகளுடன் விஞ்ஞானிகளை குழப்பி வருகிறது. ஆரம்ப காலத்தில் ஒரு சுவாச நோயாக கருதப்பட்ட இந்த தொற்றுநோய் காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றுடன் ஆரம்பமானது. பின் படிப்படியாக புதிய அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. சிலர் தசை வலி மற்றும் வயிற்றுப் போக்குடன் வந்தனர். குழந்தைகளுக்கு அழற்சி அறிகுறிகளையும், நீல நிற கால் விரல்களையும் வெளிக்காட்டியது.

தற்போது மருத்துவர்களை குழப்பும் வகையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான தடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இளம் நோயாளிகளுக்கு பரவலான சரும தடிப்புக்கள்

சரும அழற்சி குறித்து ஸ்பானிஷ் மருத்துவர்கள் 375 நோயாளிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அதில் கொரோனா நோயாளிகளுக்கு சருமத்தில் தடிப்புக்கள் ஏற்படுவதை கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். அதுவும் இந்த அறிகுறிகள் இளம் நோயாளிகளுக்கே அதிகம் காணப்படுவதாகவும், பல நாட்கள் நீடித்திருப்பதாகவும் கண்டறிந்தனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சில வைரஸ் தொற்றுக்களில் தடிப்புக்கள் பொதுவானவை. இதற்கு சின்னம்மை ஒரு சிறந்த உதாரணம். ஆனால், கொரோனாவால் ஏற்படும் தடிப்புக்கள் சற்று வேறுபட்டவை. இது மிகவும் விசித்திரமானது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த ஆய்வில் கலந்து கொண்ட நோயாளிகள் சுவாச அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள். இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு வகையான தடிப்புக்கள் குறித்து காண்போம்.

மாகுலோபபுல்ஸ்

உங்கள் சருமத்தில் மிகவும் சிறிய, வீங்கிய மற்றும் சற்று தடித்து சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இது தான் மாகுலோபபுல்ஸ். இந்த தடிப்பு சுமார் 7 நாட்கள் நீடித்திருக்கும். பெரும்பாலும் இம்மாதிரியான சிவந்த தடிப்புக்கள் கொரோனாவின் தீவிரமான நிகழ்வுகளில் பொதுவாக கவனித்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொட்டால் எரிச்சலூட்டும் அரிப்பு

இந்த வகை தடிப்புக்கள் பிங்க் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும். இது பெரும்பாலும் அரிப்புக்களை உண்டாக்கும். இதுப்போன்ற தடிப்புக்கள் கொரோனா நோயாளிகளின் உடலில் காணப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கைகளிலும் இது காணப்படும்.

கோவிட் டோ (COVID toe)

இந்த வகை அரிப்பு குழந்தைகளின் கால் விரல்களில் பொதுவாக காணப்படுகிறது. ஆனால் கைகளிலும் இது காணப்படலாம். இது பார்ப்பதற்கு உறைப்பனி கடித்தது போன்று தெரியும். பெரும்பாலும் இது இளம் நோயாளிகளிடம் காணப்படுகிறது. மற்றொரு விசித்திரம் என்னவென்றால், இது நோய்த்தொற்றின் பிந்தைய கட்டங்களில் தோன்றி, சுமார் 12 நாட்கள் நீடித்திருக்கும்.

கொப்புளங்கள்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் கைகால்கள் மற்றும் உடற்பகுதியில் சிறு கொப்புளங்கள் தோன்றலாம். இந்த தடிப்புக்கள் அரிப்புக்களை உண்டாக்குபவை. பெரும்பாலும் நடுத்தர வயது நோயாளிகளிடம் இந்த அறிகுறியைக் காணக்கூடும். பொதுவாக இந்த தடிப்புக்கள் கொரோனாவின் மற்ற அறிகுறிகள் வெளிப்படும் முன்னே தோன்றும் மற்றும் சுமார் 10 நாட்கள் வரை நீடித்திருக்கும்.

நெக்ரோசிஸ் அரிப்பு

இதை லிவெடோ/நெக்ரோசிஸ் அரிப்பு என்றும் அழைக்கலாம். இந்த நிலையானது சருமத்தில் கறைப்படிந்த தோற்றத்தை அளிக்கும். இது நெட் வடிவத்தில் காணப்படுவதோடு, சிவப்பு அல்லது நீல நிறத்தில் மாற்றமடையும். இது பொதுவாக மோசமான இரத்த ஓட்டத்தால் ஏற்படுவதாகும். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் வயதான நோயாளிகளிடம் இது பொதுவாக காணப்படும்.









சீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ, படங்கள்)

சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..! (வீடியோ, படங்கள்)

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!

கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

‘சரியான பாதையில் இலங்கை’ !!

’நாட்டுக்குள் டயஸ்போராவினர் நுழைய முடியாது’ !!

’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!

நேற்று பதிவானோரில் 13 பேர் கடற்படையினர் !!

நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!

மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்கு !!

இதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரண குணம்!!

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா!!

4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்!!

PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*