;
Athirady Tamil News

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்!!

0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று சுகாதார விதிமுறைகளை காரணமாக சொல்லி நிகழ்வுகளை பொலிஸார் குழப்பும் விதமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால் பொலிஸார் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க தவறியுள்ளமையால் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய போது அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் சுகாதார விதிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு நீண்ட விளக்கம் கொடுத்தனர்.

அதில் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.வீரசிங்க ஆகியோரும் மாணவர்களுக்கு சுமார் 10 நிமிடங்கள் கோரோனோ தொடர்பான விளக்கங்களை கொடுத்தனர்.

ஆனால் அந்த பொலிஸ் குழுவில் இருந்த இரண்டு பொலிஸார் முககவசம் அணியாதே அவ்விடத்தில் நின்றிருந்தனர். அதேவேளை கைக்கு கையுறை எதுவும் அணியாது வெற்று கைகளால் மாணவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி விவரங்களை பதிந்தனர்.

முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பொலிஸார் முக கவசம் அணியாது அவ்விடத்தில் பிரசன்னம் ஆகியிருந்தனர்.

அதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தந்தை செல்வா நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் போது , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கையுறை அணியாது நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ சுமார் கோரோனோ பற்றிய 10 விளங்கங்களையும் சுகாதார நடைமுறைகள் பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தார்.

அதேபோன்று நேற்று முன்தினம் செம்மணியில் நடைபெற்ற நிகழ்விலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

அதுமட்டுமின்றி , கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நகர் பகுதியில் நின்று வீதியில் செல்வோர் உரிய முறையில் முககவசம் அணிய வேண்டும் என வீதியில் செல்வோரை மறித்து விளக்கம் கொடுத்தும் இருந்தார்.

இந்நிலையில் அவரது பொலிஸ் குழுவில் உள்ள பொலிஸார் சுகாதார முறைகளை கடைப்பிடிக்காது முக கவசம் கூட அணியாது பொது இடங்களில் கடமையாற்றி வருவது பலர் மத்தியில் விசனத்தை உண்டு பண்ணி உள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!

கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா!!

நாளை முதல் தனியார், இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் !!

சீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ, படங்கள்)

சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..! (வீடியோ, படங்கள்)

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!

கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

‘சரியான பாதையில் இலங்கை’ !!

’நாட்டுக்குள் டயஸ்போராவினர் நுழைய முடியாது’ !!

’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!

நேற்று பதிவானோரில் 13 பேர் கடற்படையினர் !!

நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*