கருத்துக்களை மாறி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.செல்வம் எம்பி!!

சிங்களம் தெரியாது என்பதற்காக கருத்துக்கைளை மாறி சொல்ல வேண்டிய நிலை எமக்கில்லை.
என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயகக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்டபொறுப்பாளர் கிறிஸ்டி குகராயாவின் 21வது நினைவுதினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியடியில் இன்ற இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாம் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.மக்களுடைய ஐனநாயக முறை பயன்படுத்தப்பட வேண்டும்.மக்கள் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.கொரோனோ தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபுமீறலை கொண்டு செயற்ப்படுத்துவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சூழலுக்கு ஏற்றவகையில் தேர்தலை நடாத்த வேண்டும் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மக்கள் கூட்டமைப்பை நிச்சயம் ஆதரிப்பார்கள்.அவர்களிற்கு நம்பிக்கை தரக்கூடிய நிலமையை நாம் ஏற்படுத்தவேண்டும்.
எங்களுடைய மக்களின் விடுதலை தான் எமது பிரதான நோக்கம்.அதற்காகவே துப்பாக்கி ஏந்தினோம்.
அது புனிதமான தென்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற வகையில் சுமந்திரன் தொடர்பாக எதிர்மாறான கருத்துக்களை நாம் இதுவரையில் கூறவில்லை.
எனினும் முக்கிய பதவியில் இருந்துகொண்டு விடுதலை போராட்டத்தை ஏற்கவில்லை என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து என்பதை ஏற்கமுடியாது.ஆயுதப் போராட்ட விடயத்தில் தமிழ் கூட்டமைப்பின் கருத்துக்கள் அத்தனையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தன் ஐயாவை சந்தித்து உரையாடஇருக்கின்றோம்.
அத்துடன் அவர் தெரிவித்த கருத்துக்கள் பல ஊடகங்களில் சிங்களமொழி பெயர்ப்பு வந்திருக்கின்றது.முன்னாள் வடமாகாண அவைதலைவர் சிவஞானம் அந்தவிடயம் தொடர்பாக சரியான விளக்கம் ஒன்றை அழித்துள்ளார்.அதிலே சொல்லபட்ட விடயங்கள் அத்தனையும் உண்மை.சிங்களம் தெரியாது என்பதற்காக கருத்துக்கைளை மாறிசொல்ல வேண்டிய நிலை எமக்கில்லை.அப்பிடி சொல்வது எங்களை மலினப்படுத்துவது போலதெரிகின்றது.என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
கடைசிக் காலத்தில் கருணாநிதி செயற்பட்டதைப் போன்றே மாவை செயற்படுகிறார் – சிவாஜிலிங்கம்!!
கூட்டமைப்பினர் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்கள் – கருணா அம்மான்!! (வீடியோ &படங்கள்)
சுமந்திரனின் செவ்வி தொடர்பில் சீ.வி.கே. சிவஞானம் விளக்க அறிக்கை!! (வீடியோ)
சுமந்திரனின் உருவப் பொம்மை காவல்துறையினரால் அகற்றப்பட்டது.!! (வீடியோ)
சுமந்திரன் கட்சியில் நீடித்தால் அது சம்பந்தன்,மாவையின் பலவீனமே – சிவசக்தி ஆனந்தன் சீற்றம்!!
அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகழிடம் என்பதை நிரூபித்து விட்டார் சுமந்திரன்!!
சுமந்திரனிடம் பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்த சுகாஸ்!! (வீடியோ)
விடுதலைப் புலிகள் மீது, எப்படி புதிதாக பற்று வந்தது..? – ஆனந்தசங்கரி கேள்வி!! (வீடியோ)
சுமந்திரனின் கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: சித்தார்த்தன்!
ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து TNAயின் கருத்தாகது – மாவை!!
சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் -அனந்தி!! (வீடியோ)
சுமந்திரனின் கருத்து கண்டனத்துக்குரியது – தவராசா கலையரசன்.!! (வீடியோ)
சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்!!