வவுனியா லைக்கா கிராமத்தில் நிவாரணம் வழங்கிய செரண்டிப் சிறுவர் இல்லம்!! (படங்கள்)
வவுனியா வடக்கு லைக்கா கிராமத்தில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய செரண்டிப் சிறுவர் இல்லம்
வவுனியா வடக்கு, பரசங்குளம் லைக்கா கிராமத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்வாதாரத்தை நடாத்திச் செல்கின்ற 82 குடும்பங்களுக்கு செரண்டிப் சிறுவர் இல்லத்தால் நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கிராமம் ஒரு குடியேற்றக்கிராமமாகும். இங்கு வசிக்கும் மக்கள் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு குடியேற்றப்பட்டவர்கள். இவர்கள் வெளி இடங்களுக்கு சென்று நாளாந்த கூலிவேலை செய்வதன் மூலமே தமது வாழ்வாதாரத்தை நடாத்தி வந்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அன்றாட கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலையில் மிகவும் வறுமைக்கு முகங்கொடுத்து வாழ்கின்றனர். இவர்களில் முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணித்தாய்மார், பெண் தலமைத்துவக் குடும்பங்கள், கைவிடப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்ந்து வருகின்றனர்.
இம் மக்களின் உணவுப்பிரச்சனையை தீர்க்கும் முகமாக செரண்டிப் சிறுவர் இல்லத்தினால் 82 நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் செரண்டிப் சிறுவர் இல்ல பணியாளர்கள், வவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி பிரதேச செயலாளர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”





