;
Athirady Tamil News

பின்வாசலால் வந்த சுமந்திரன் கருத்து தெரிவிப்பதா!! முன்னாள் போராளிகள் குமுறல்!!

0

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு பின்வாசலால் வருகைதந்த சுமந்திரன் விடுதலைபோராட்டத்தை பற்றி கருத்து தெரிவித்திருப்பதானது கண்டனத்திற்குரியதென்று முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய வாழ்வாதார செயலணியின் தலைவர் வி.ஈழம்,மற்றும் பேச்சாளர் ப.அறிவாளன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

குறித்த விடயம்தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்..

சுமந்திரன் தொடர்பான கருத்துக்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ்மக்களின் ஆயுத விடுதலை போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ்மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கபட்டதன் பின்னர் பின்வாசலால் வருகைதந்த சுமந்திரன் அதுதொடர்பாக கருத்து தெரிவித்திருப்பதானது கண்டனங்களுக்குரியதே.எனவே குறித்தவிடயத்தில் ஊடகங்கள் வாயிலாக மாத்திரம் கருத்து தெரிவிப்பதை விடுத்து அக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்களை கேட்டு கொள்கின்றோம். இது முன்னாள் போராளிகளாகிய நாங்கள் விடுக்கின்ற அன்பான வேண்டுகோள்.

எனவே தமிழ்மக்களுடைய மனங்களிலே வேதனையை கொடுக்கின்ற இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக நிறுத்தப்படவேண்டும் என கேட்டுகொள்கின்றோம்.அத்துடன் தேர்தல்காலங்களிலும்,மாவீரர் தினங்களிலும் முன்னாள் போராளிகளை அரவணைத்து ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்,தமது அரசியல் நாடகங்கள் முடிந்தபின்னர் எம்மை கண்டுகொள்வதில்லை. என்று தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

கருத்துக்களை மாறி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.செல்வம் எம்பி!!

கூட்டமைப்பினர் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்கள் – கருணா அம்மான்!! (வீடியோ &படங்கள்)

சுமந்திரனின் செவ்வி தொடர்பில் சீ.வி.கே. சிவஞானம் விளக்க அறிக்கை!! (வீடியோ)

சுமந்திரனின் உருவப் பொம்மை காவல்துறையினரால் அகற்றப்பட்டது.!! (வீடியோ)

சுமந்திரன் கட்சியில் நீடித்தால் அது சம்பந்தன்,மாவையின் பலவீனமே – சிவசக்தி ஆனந்தன் சீற்றம்!!

அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகழிடம் என்பதை நிரூபித்து விட்டார் சுமந்திரன்!!

சுமந்திரனிடம் பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்த சுகாஸ்!! (வீடியோ)

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சுமந்திரன்!!! (படங்கள்)

தமிழரின் போராட்டத்தை விமர்சிக்க சுமந்திரனுக்கு தகுதியில்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர்!!

விடுதலைப் புலிகள் மீது, எப்படி புதிதாக பற்று வந்தது..? – ஆனந்தசங்கரி கேள்வி!! (வீடியோ)

சுமந்திரனின் கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: சித்தார்த்தன்!

ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து TNAயின் கருத்தாகது – மாவை!!

சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் -அனந்தி!! (வீடியோ)

சுமந்திரனின் கருத்து கண்டனத்துக்குரியது – தவராசா கலையரசன்.!! (வீடியோ)

சுமந்திரன் அவர்களின் பேச்சு- சிறிரெலோ கண்டம்!!

சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்!!

சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? – க.வி.விக்னேஸ்வரன்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*