கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாயைத் தாண்டியது!!

கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு சிறிலங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன.
அதற்கான காசோலைகள் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவினால் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
மொபிடெல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி நலின் பெரேரா உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியி கையளிக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அதிகாரிகள் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
அத்துடன், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம் 03 லட்சம் ரூபாயையும் கையளித்தது.
இன்று பிற்பகலாகும் போது கோவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாயை கடந்திருந்தது.
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும் – என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்!!
இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!
கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)
நாளை முதல் தனியார், இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் !!
முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!
கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!
மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)
’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!
கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)
சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!
அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!