யாழ் உரும்பிராய் பகுதியில் ஒருவர் கைது!!

யாழ் உரும்பிராய் பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு அதிக விலையில் மதுபானம் முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து மது போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
உரும்பிராயப் பகுதியில் மதுபானசாலை ஒன்றில் மதுபானம் விலைக்கு விற்பனை செய்வதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சிவில் உடையில் பொலிஸார் மதுபானம் வாங்குவது போன்று சந்தேக நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்தவர் கால் போத்தல் மதுபானம் 500 ரூபாவாகவும் பியர் ரின் ஒன்று 400 ரூபாவாகவும் பொலிஸாருக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அத்துடன் அவரது வீட்டைச் சோதனையிட்டு மதுபானம், பியர் போத்தல்களைக் கைப்பற்றினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”