அம்பாறை கரையோர பிரதேசங்களில் நள்ளிரவு தாண்டியும் மக்கள் அச்சத்தில் !! (படங்கள்)
வதந்திகளால் பீதியுடன் மக்கள் வீதிகளில் : அம்பாறை கரையோர பிரதேசங்களில் நள்ளிரவு தாண்டியும் மக்கள் அச்சத்தில் !!
கிணறுகள் முற்றாக வற்றிவருவதாகவும்,கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் வெளியான தகவலை அடுத்து கல்முனை, சாய்ந்தமருது,மருதமுனை, பாண்டிருப்பு, நீலாவணை,மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் உயிர்களை பாதுகாத்து காத்துக்கொள்ளும் நோக்கில் வீதியில் பீதியுடன் நின்றுவருவதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர பிரதேச மக்கள் இன்னும் அந்த பேரதிர்ச்சியில் இருந்து மீளாத சூழ்நிலையில் இப்படி அடிக்கடி வதந்திகள் பரவுவதும், மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு கருதி உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாவதும் தொடர்ந்தும் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் இன்றும் இவ் வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவிவருகிறது.
சில இடங்களில் 1-3 இன்ச் அளவில் கிணறுகள் வற்றிக் காணப்பட்டாலும் ஆபத்தான சூழ்நிலைகள் ஒன்றும் தென்படவில்லை. பொலிஸாரும், பாதுகாப்பு தரப்பினரும் மக்களை தெளிவுபடுத்தும் தமது கடமைகளை செய்துவருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”
கல்முனையின் சில இடங்களில் கிணற்று நீர் வற்றியுள்ளதாக செய்திகள்!! (படங்கள்)