;
Athirady Tamil News

திருப்பதியில் முக கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம்..!!

0

கொரோனா ஊடரங்கையொட்டி கடந்த மார்ச் 20-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

வருகிற 17-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டால் திருப்பதியில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பதியில் உள்ள ரூயா, சிம்ஸ் ஆஸ்பத்திரியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த லாரி டிரைவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதியில் வெளியில் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி நகராட்சி கமி‌ஷனர் கிரிஷ் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பதியில் இன்று முதல் முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு ரூ.500-ம் சாலைகளில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.1000, கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கு ரூ.1,000, சானிடைசர் பயன்படுத்தாத கடைகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 10 =

*