;
Athirady Tamil News

பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை!!

0

சுகாதார துறையினரின் உத்தரவாதமின்றி பொதுத் தேர்தலையோ, நாட்டின் ஏனைய நடவடிக்கைகளையோ முழுமையாக முன்னெடுக்க முடியாது.

இந்நிலையில் நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து முதலீட்டாளர்கள் அச்சப்படும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் வெளிப்படையாக அறிவித்தமை தவறாகும் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க , ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளித்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் முன்னாள்அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பொதுத்தேர்தல் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டனர்.

இந்த கலந்துரையாடல் கொழும்பு- 7,5 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் இடம்பெற்றது. இதன் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில் ,

பல பிரச்சிணைகள் ஏற்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக சுகாதார துறை உத்தரவாதம் இன்னும் அளிக்க வில்லை.

ஊரடங்கு சட்டம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாது இந்த பிரச்சினையிலிருந்து மீள இயலாது .

கொவிட் – 19 வைரஸின் பின்னர் புதியதொரு சூழலே உருவாக போகிறது. அதற்கு ஏற்றவாறு எமது சட்டத்திட்டங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் ஜுன் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமற்ற விடயமாகும். அதே நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதியும் உள்ளார் என்றே அறிகிறேன். பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்தலை நடத்த கூடிய வாய்ப்புகளே அதிகம் உள்ளன. சுகாதார துறை உத்தரவாதம் அளிக்காமல் தேர்தல் ஆணைக்குழுவினால் திகதியை தீர்மானிக்க இயலாது .

எவ்வாறாயினும் அரசாங்கத்திடம் தற்போது நிதி பற்றாக்குறை உள்ளது. அரச ஊழியர்களின் விருப்பமின்றி சம்பளத்தின் ஒரு பகுதியை பெற்றுக்கொள்ளவும் முடியாது. ஆனால் நெருக்கடியை சமாளித்துக் கொள்ள அரச ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை பெற்றுக்கொள்ளவே முயற்சித்தது.

அந்த முயற்சி சாத்தியப்பட்டிருந்தால் மே மாத சம்பளத்தை வழங்குவதில் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது. பாரியதொரு அரசியல் நெருக்கடியில் தான் நாடு உள்ளது.

எதிர்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதென்பதை ஜனாதிபதி செயலாளர் வெளிப்படையாக அறிவித்தது தவறு. ஏனெனில் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து பின்வாங்கி விடுவார்கள்.

பங்கு சந்தை நடவடிக்கைளை தொடர்ந்தும் முன்னெடுத்திருக்க வேண்டும். உரியதொரு திட்டமில்லையென்றால் பொதுத் தேர்தலின் பின்னரான நிலைமை மிகவும் மோசமானதாகவே அமையும். சர்வதேச நாணய நிதியத்திடமும் கடன் பெற கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

இராணுவ அதிகாரிகளை செயலாளர்களாக நியமிப்பது அரச நிர்வாக துறையில் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும். சுகாதார அமைச்சின் செயலாளரில் பிரச்சிணை இருந்திருந்தால் அதற்கு பதிலாக மற்றுமொரு சிவில் நிர்வாக துறை அதிகாரியை நியமித்திருக்க வேண்டும்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரியின் தகமை குறித்து எமக்கு சிக்கல் இல்லை. ஆனால் அவர் இராணுவ அதிகாரியாகவே செயற்படுவார். இது பிரச்சிணையை தோற்றுவிக்கும் .
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா!!

சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் இருந்து வவுனியா வந்த 11 பேருக்கு சுய தனிமைப்படுத்தல்!!

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்!!

யாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. சத்தியமூர்த்தி!!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்!!

இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!

கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா!!

நாளை முதல் தனியார், இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் !!

சீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ, படங்கள்)

சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..! (வீடியோ, படங்கள்)

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!

கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

‘சரியான பாதையில் இலங்கை’ !!

’நாட்டுக்குள் டயஸ்போராவினர் நுழைய முடியாது’ !!

’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!

நேற்று பதிவானோரில் 13 பேர் கடற்படையினர் !!

நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + eighteen =

*