;
Athirady Tamil News

செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்.. (படங்கள்)

0

செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்.. (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின், அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் வவுனியா மாவட்ட பொருளாளரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான திரு.வேலாயுதம்பிள்ளை குகதாசன் அவர்களின் தலைமையில் மக்களுக்கான இடர் உதவி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிவாரணப் பொருட்களுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) ஜேர்மன் கிளைத் தோழர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான திரு.சுந்தரலிங்கம் காண்டீபன், கழகத்தின் தெற்கு தமிழ் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு.தர்மலிங்கம் யோகராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 8 =

*