;
Athirady Tamil News

செட்டிக்குளத்தில் மண் அகழ்வு நிறுத்தம்!! (படங்கள்)

0

செட்டிக்குளத்தில் பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் மண் அகழ்வு நிறுத்தம்.

செட்டிகுளம் கல்நாட்டியில் விவசாயம் மேற்கொள்ளும் பகுதிக்கு அண்மையில் மண் அகழ்வினை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலுள்ள ஐந்து குளங்களின் கீழ் 320 ஏக்கர் பரப்பில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த கிராமங்களில் வாழும் மக்கள் வாழ்வாதாரமாக விவாசாயத்தையே மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் பாரியளவில் மண் அகழும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பரராயகுளம் , கொல்லங்குளம், துத்திக்குளம், மரக்காரம்பளை குளம், ஊறங்குளம் போன்ற ஐந்து குளங்களுக்கான நீர் கன்னாட்டி பகுதியில் இருந்தே செல்கிறது. இவ்வாறு மண் அகழ்வினை மேற்கொள்வதால் அகழப்படும் குழிகளில் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் குளங்களிற்கு நீர் வரத்து குறைவடைந்துள்ளது.
அதனால் இவ் மண் அகழ்வினை உடனடியாக நிறுத்த வேண்டுமென கிராம மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் அலைக்ஸ் யூட் மண் அகழ்வில் ஈடுபடும் குறித்த நபர்களிடம் அனுமதி பத்திரங்களை காண்பிக்குமாறு கோரிய போது பிரதேசசபையின் அனுமதி அவர்களிடம் இருந்திருக்கவில்லை. உடனடியாக மண் அகழ்வினை நிறுத்துமாறும் ,உரிய முறையில் அனுமதியை பெறுமாறு தெரிவித்ததையடுத்து மண் அகழ்வு நிறுத்தப்பட்டது.பின்னர் போராட்ட காரர்கள் அவ்விடத்திலிருந்து அகன்றிருந்தனர்.

இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர், கன்னாட்டி பிரதேச பங்குந்தந்தை, பிரதேச மக்கள், கிராம அமைப்புக்கள், கமக்கார அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + seventeen =

*