;
Athirady Tamil News

சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய அர்ச்சகர் மாற்றத்தால் குழப்பம்!! (படங்கள்)

0

வரலாற்றுச் சிறப்புமிக்க சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் குருக்களை மாற்றிய விகாரத்தில் இன்று அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

போர்க் காலத்தில் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் தர்மகத்த உள்ளிட்ட சிலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட நிலையில் ஆலயத்தின் உரிமை தொடர்பில் பிணக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆலயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
இருந்த போதிலும் அதன் தர்மகத்தவின் வழி வந்தவர்கள் ஆலய பூசை போன்றவற்றை தொடர்ந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் பல வருடங்களாக அங்கு பூஜை செய்து வரும் குருக்கள் திடீரென நிறுத்தப்பட்டு வேறு ஒரு அர்ச்சகர் ஆலயத்தில் காலை பூசை நடத்த முற்பட்டதைத் தொடர்ந்து அங்கு கூடிய ஒரு தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இன்று காலை குழப்பம் நிலவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார், கோரோனா காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது ஆலயத்தில் இவ்வாறு ஒன்றுகூட முடியாது என கூறினர். அதனால் அங்கு கூடியவர்கள் வெளியேற்றினர்.

சம்பவத்துடன் தொடர்புடையோரை விசாரணைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 1 =

*