;
Athirady Tamil News

லாக்டவுன் இல்லை எனில் பாதிப்பு 29 லட்சம், உயிரிழப்பு 78 ஆயிரமாக இருந்திருக்கும்: மத்திய அரசு..!!

0

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. மார்ச் 25-ந்தேதி வரை இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ல் இருந்து 600 வரைதான் இருந்தது.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏப்ரல் 20-ந்தேதியில் இருந்து மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்தது.

தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அரசின் நடவடிக்கை சரியில்லாததால்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால்தான் 78 லட்சம் பேர் பாதிக்கப்பட வேண்டியிருந்த நிலை தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது:-

* 80 சதவீதம் மரணம் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லி மாநிலத்தில்தான் நிகழ்ந்துள்ளது.

* லாக்டவுனால் 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட இருந்தது தடுக்கப்பட்டுள்ளது.

* 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ளது.

* கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஐந்து மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில்தான் அதிகமாக உள்ளன.

* புள்ளி விவரம் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளிவிவர நிறுவனம் ஆய்வு ஆகியவை லாக் டவுன் காரணமாக 20 லட்சம் பேர் நோய் தொற்றில் இருந்தும், 54 ஆயிரம் பேர் பலியாவதில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளன.

* இந்தியாவின் பொது சுகாதார பவுண்டேசன் 78 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

* இரண்டு ஆய்வு அமைப்புகள் 23 லட்சம் பேர் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டதாகவும், 68 ஆயிரம் பேர் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன.

லாக் டவுன்

* லாக்டவுன் தொடங்கும்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாள் 3.4 ஆக இருந்தது. தற்போது அது 13.3 நாட்களாக உயர்ந்துள்ளது.

* போஸ்டன் கல்சன்டிங் குரூப் ஆய்வின்படி 2.1 லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கடந்த நான்கு நாட்களாக தினற்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை செய்யப்படுகிறது- ஐசிஎம்ஆர்

* இன்று மதியம் ஒரு மணி வரை 27,55,714 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

* உயிரிழப்பின் சதவீதம் 3.13-ல் இருந்து 3.02 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − four =

*