;
Athirady Tamil News

யாழ். சாலையின் பஸ் அக்கரைப்பற்றுவரை சேவையில் ஈடுபட்டதை மறந்த சாலைப் பொறுப்பதிகாரி!!

0

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் சாலையின் பேருந்து சேவைகள் வடக்கு மாகாணத்திற்கு வெளியில் மீளவும் ஆரம்பிக்கப்படவில்லை என சாலையின் பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து மட்டக்களப்பு – அக்கரைப்பற்று வரை சேவையில் ஈடுபட்டு மறுபடியும் நேற்று யாழ்ப்பாணம் திரும்பியது. இந்த சேவையின் ஊடாக 32 ஆயிரம் ரூபாய் நிதி பயணிகள் கட்டண அறவீடாக யாழ்ப்பாணம் சாலைக்குக் கிடைத்துள்ளது.

சாரதி, நடத்துனர் ஆகியோர் உணவு மற்றும் தேனீர் கிடைப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு சேவையில் ஈடுபட்டுத் திரும்பிய நிலையில் ஏதோ ஒரு பின்னணியில் சாலைப் பொறுப்பதிகாரி இந்தத் தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றுக்கே அவர் இந்தத் தவறான தகவலை வழங்கியுள்ளார்.

நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் புறப்பட்ட யாழ்ப்பாணம் சாலைப் பேருந்து ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்து இன்று மட்டும் ஒப்புதல் வழங்கப்படுவதாக நிபந்தனையுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டது. அந்தப் பேருந்து மீளவும் அக்கரைப்பற்று – மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணத்தை நேற்று வந்தடைந்தது.

வரும் திங்கட்கிழமை இடம்பெறும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் வேறு மாகாணங்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் அடுத்த வாரம் முதல் இந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான சேவை ஆரம்பிக்கப்படவில்லை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*