;
Athirady Tamil News

90 வீடியோக்கள்.. “தொங்கி விடுகிறேன்”.. கொரோனா பற்றின பகீர்கள்.. தணிகாச்சலம் மீது பாய்ந்த குண்டாஸ்!! (வீடியோ, படங்கள்)

0

“தூக்கில் தொங்கிவிடுகிறேன்” என்ற ஆவேச வார்த்தைகள் உட்பட கிட்டத்தட்ட 90 வீடியோக்களில் ஒவ்வொன்றிலும் கொரோனா குறித்த ஒவ்வொரு பகீர் தகவலையும் சொல்லி மக்களையும் குழப்பி அச்சத்தில் ஆழ்த்திய தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பல வருடங்களாக டிவியில் பார்த்து பழகிய முகம்தான் தணிகாசலம்.. விளம்பரதாரர் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கவும் இவரது மருத்துவத்தன்மை குறித்த யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. ஆட்டிசம், வெண்புள்ளி குறைபாடு, மூலம் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.. ஆனால் இந்த நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொண்டவர்களே 2 புகார்கள் தந்துள்ளனர்.

போலி மருத்துவர்

“கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், என்னை மத்திய மாநில அரசுகள் சிகிச்சை தர விடாமல் தடுக்கின்றன, ஐநா என்னை தடுக்கிறது, கொரோனாவை குணப்படுத்த முடியாவிட்டாவில் தூக்கில் தொங்குகிறேன்” என்றெல்லாம் இவர் சோஷியல் மீடியாவில் பேசி வந்த நிலையில்தான், அவரை போலி சித்த மருத்துவர் என்று சித்த மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

விசாரணை

அத்துடன், தம்மிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதித்து வருவதாக, தணிகாச்சலம் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. கைது செய்யப்படுவதற்கு முன்பேயே இவர் முறையாக படித்த ஒரு டாக்டர் இல்லை என்று சொல்லிவிட்டனர்.

பிஎஸ்சி கெமிஸ்ட்ரி

விசாரணையில்தான் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்துள்ளது தெரியவந்தது.. இவர் மனைவி சித்த மருத்துவம் முறைப்படி படித்துள்ளாராம்.. தணிகாசலம் அப்பா, பாம்பு, தேள்கடிக்கு நாட்டு வைத்தியம் செய்து வந்தவராம்… அதேபோல தணிகாசலமும் பரம்பரை வைத்தியர் என்ற சர்ட்டிபிகேட்டை வைத்து கொண்டுதான் சித்த மருத்துவர் என்று இவ்வளவு காலம் டிவியில் பேசி, கோடிக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளார்.

மருந்து குடோன்

மலேசியா, சீனா, ஸ்விட்சர்லாந்து என பல்வேறு நாடுகளில் நோய்களை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்று, மருந்துகளையும் அங்கு அனுப்பியிருக்கிறாராம்.. இப்படி 6 வருடமாகவே மருந்துகளை அனுப்பி வைத்து கொண்டிருந்திருக்கிறார்.. இதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு மருந்து குடோனே சொந்தமாக வைத்திருந்திருக்கிறார்.. அங்குதான் எல்லா மருந்தும் தயாராகுமாம். இந்த தகவலை கேட்டு போலீசாரே மிரண்டு விட்டனர்.

குண்டர் சட்டம்

தற்போது தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது… இதற்கான நடவடிக்கையை சென்னை மாநகர கமிஷனர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்… தணிகாச்சலத்தின் மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருப்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எத்தனை பேருக்கு இவர் மருத்துவம் பார்த்தார், அவர்களின் நிலை, பாதிப்புகள், மருந்துகளின் தன்மை குறித்தெல்லாம் இனிமேல்தான் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்தள்ளி 2-வது இடத்துக்கு நகரும் பிரேசில்- உயிரிழப்பும் அதிகரிப்பு!! (வீடியோ)

தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு !! (வீடியோ, படங்கள்)

தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது !!

முழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்!! (வீடியோ, படங்கள்)

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மதுபான நுகர்விலும், புகைத்தலிலும் கணிசமான வீழ்ச்சி!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது!!

பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை!!

இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா!!

சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் இருந்து வவுனியா வந்த 11 பேருக்கு சுய தனிமைப்படுத்தல்!!

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்!!

யாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. சத்தியமூர்த்தி!!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்!!

இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!

கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*