;
Athirady Tamil News

கேரளாவில் புதிதாக 62 பேருக்கு கொரோனா..!!!

0

கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி மாநிலத்தில் இன்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்ட 62 பேரில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மேலும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். எஞ்சிய 13 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் 7 பேர் மருத்துவ ஊழியர்கள் ஆகும்.

இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பரவியவர்களில் இதுவரை 515 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 20 =

*