;
Athirady Tamil News

S.கதிர்காமநாதன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் என்புமுறிவு சத்திர சிகிச்சை விடுதி!! (படங்கள்)

0

கொடையாளர் S.கதிர்காமநாதன் அவர்களின் 52 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமையப்பெறவுள்ள என்புமுறிவு சத்திர சிகிச்சை விடுதி மற்றும் கண் சத்திர சிகிச்சை விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா 22.05.2020 மதியம் 12.00 மணிக்கு பணிப்பாளர் Dr.க.ராகுலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொடையாளர் S.K நாதன், மாவட்ட அரசாங்க அதிபர், செயலாளர் சுகாதார அமைச்சு வடமாகாணம், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடமாகாணம், பணிப்பாளர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மன்னார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவுனியா, பொறியியலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர் இவ்விடுதி அமையப்பெறுவதற்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எமது வைத்தியசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + seven =

*