;
Athirady Tamil News

இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் கஸ்பட்ட முதியவருக்கு உதவித்திட்டம்!! (படங்கள்)

0

வவுனியாவில் வறுமையிலும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையிலும் கஸ்பட்ட முதியவருக்கு உதவித்திட்டம்

வவுனியா ஒமந்தை பணிக்கநீராவி பகுதியில் முதுமையிலும் வறுமையில் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் வசித்து வந்த முதியவருக்கு இன்றையதினம் (25.05.2020) உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

வறுமையின் கோரப்பிடிக்குள்ளும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் ஒருநேர உணவுக்கு கூட மிகவும் கஸ்ப்பட்ட முதியவரினை வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஸன் மற்றும் ராஜேந்திரன் சஜீவன் ஆகியோரின் பார்வையிட்டிருந்தனர்.
மருத்துவ தேவைகளின் அடிப்படையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்ற குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியின் விரிவுரையாளரான கேசவன் வேண்டுகோளின் பேரில் வவுனியா வடக்கு வலய கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரியும் கஜன் அவரது சகோதரனான தவராசா இளமதுரனின் நிதி அனுசரணை ஊடாக மேற்படி குடும்பத்திற்கான உதவிகளை வழங்குவதற்கு கரங்கோர்த்து இருந்தனர்.

மேற்படி முதியவருக்காக புதிதாக கட்டில் , மெத்தை , எயார் மெற்றர்ஸ்(Air Mattress) போன்றன கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*