;
Athirady Tamil News

வவுனியா நெளுக்குளம் பகுதியில் வறிய குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!! (படங்கள்)

0

வவுனியா, நெளுக்குளம் ஊர்மிலாகோட்டம் பகுதியில் நீண்டகாலமாக கொட்டில் வீடொன்றில் வசித்து வந்து குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு வவுனியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரின் 2 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடு அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளுடன் ஆறுபேரை உள்ளடக்கிய அக்குடும்பம் தற்காலிக கொட்டில் ஒன்றில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்திருந்த நிலையிலேயே அவர்களிற்கு குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*