;
Athirady Tamil News

மட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

0

மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் 16 வது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 31.05.2020) கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் அனுஷ;டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தேவ அதிரன் தலைமையில் இடம் பெற்ற அஞ்சலியில் ஊடகவியாலாளர்கள் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன்; திருவுருவப் படத்திற்கு முத்த ஊடகவியலாளர் சிவம் பாக்கிய நாதன் முதல்சுடர் ஏற்றியதையடுத்து எனைய ஊடகவியலாளர்கள் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு அன்னாரது ஆத்மா சாந்திக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

குறித்த அஞ்சலி செலுத்தும் தினம் அரசு சுகாதார முறைகளுக்கு ஏற்றாற்போல் நடாத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர் சங்கத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + nineteen =

*