;
Athirady Tamil News

காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு… ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர்! கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? (வீடியோ, படங்கள்)

0

காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு சென்ற இளைஞர் ஆட்டை அடித்து தூக்கியதால், கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது என்பது உண்மையிலேயே சவாலான காரியம்தான். இந்திய சாலைகளில் எப்போது? என்ன? நடக்கும் என்பதே தெரியாது. இங்கு உங்கள் வாகனத்தின் முன்பு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் நாய்கள் திடீரென குறுக்கே வரலாம். அத்துடன் சாலையை கடக்கும் மனிதர்கள் சுற்றுப்புறத்தை கவனிக்காமல் திடீரென வாகனத்தின் குறுக்கே வரக்கூடும்.

எனவேதான் இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் அபாயகரமான ஒரு விஷயமாக உள்ளது. ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளோ அல்லது மனிதர்களோ திடீரென குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருந்து வாகன ஓட்டிகள் எப்படி தப்பித்தனர்? என்பது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் உள்ளன.

இதே பாணியிலான ஒரு வீடியோவையும், அது தொடர்பான தகவல்களையும்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். பைக் ரைடர் ஒருவர் திடீரென குறுக்கே வந்த ஆடு ஒன்றின் மீது மோதி விட்டார். இதனால் ஊர் மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக என்ன நடந்தது? என்பதைதான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

Mr speed என்னும் யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், பைக் ரைடர்கள் சிலர் ஒரு குழுவாக, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து பூடான் நோக்கி சென்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த குழுவில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து பைக்குகளும் ஹை-பெர்ஃபார்மென்ஸ் சூப்பர் பைக்குகள்தான்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்ததும், அங்கு சாலை மிகவும் குறுகலாக இருந்ததால், நார்மல் ஸ்பீடில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அத்துடன் அங்கு போலீஸ் செக்போஸ்ட் வேறு ஒன்று இருந்தது. இதனாலும் அவர்கள் வேகத்தை குறைத்துள்ளனர். இந்த குழுவில் ஒரு ரைடர் கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்10ஆர் (Kawasaki Ninja ZX10R) சூப்பர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆடு ஒன்று திடீரென கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்10ஆர் பைக்கின் முன்னால் வந்தது. அந்த பைக் ரைடரால் ஆடு மீது மோதுவதை தவிர்க்க முடியவில்லை. எனவே அவர் ஆட்டை அடித்து தூக்கி விட்டதாக தெரிகிறது. இதில், துரதிருஷ்டவசமாக அந்த ஆடு உயிரிழந்து விட்டது. மேலும் அந்த பைக் ரைடரும் கீழே விழுந்தார்.

உடனே அங்கிருந்த கிராம மக்கள் அங்கு ஒன்று கூடி விட்டனர். அவர்கள் அந்த பைக் ரைடருடன் வாக்குவாதம் செய்தனர். அத்துடன் அவர் அதிவேகத்தில் வந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் அந்த குழுவில் இருந்தவர்களோ, கேமரான ஆன் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும், நாங்கள் அதிவேகத்தில் பயணம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க அதை காட்ட தயாராக இருப்பதாகவும் கூறினர்.

தற்போது நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் மோட்டார்சைக்கிள் ரைடர்கள், கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட்களைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கெல்லாம் கிராம மக்கள் சமாதானம் அடையவில்லை. ஆடு மீது மோதியதற்காக, அவர் பணம் தர வேண்டும் என அவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தினர்.

இப்படி பிரச்னை நடந்து கொண்டிருந்த சமயத்தில் காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களிடம் என்ன நடந்தது? என்பதை பைக் ரைடர்கள் எடுத்து கூறினர். இதன்பின் அந்த அதிகாரி பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தம் செய்தார். சிறிது நேரத்தில் பைக் ரைடர், ஆட்டின் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவே பிரச்னை முடிவுக்கு வந்தது.

இதன்பின்னர் பைக் ரைடர்கள் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். ஆடு உயிரிழந்தது வருத்தமான விஷயம் என்றாலும், அதிர்ஷ்டவசமாக பைக் ரைடர் தப்பித்து விட்டார். அவருக்கோ அல்லது அவரது பைக்கிற்கோ பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. அங்கு கூடிய கிராம மக்கள் இன்னும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தால், சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியிருக்கும்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த வீடியோவில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. இந்த குழுவில் உள்ள அனைத்து ரைடர்களும் முறையாக பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துள்ளனர். பைக் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம். இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

எனவே நீங்கள் அதிவேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தால் விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி விடும். இதனால் எப்போதும் மிதமான வேகத்தில் பயணம் செய்யுங்கள். அத்துடன் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணிந்து கொண்டு பைக் பயணங்களை மேற்கொள்வதும் முக்கியமானது. ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் அளித்து வரும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் இணையதளம், அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகளை வாசகர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து வருகிறது. கார், பைக் குறித்த அண்மை செய்திகள், டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டுகள் மற்றும் வீடியோக்களை பெறுவதற்கு எமது WhatsApp, Telegram சேனல்களில் இணைந்திடுங்கள். எமது Facebook, Twitter, Instagram மற்றும் YouTube பக்கங்களுடன் தொடர்பில் இருங்கள்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 11 =

*