;
Athirady Tamil News

தாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு!!

0

தாவுத் உணவகம் அமைந்துள்ள காணியை காலிசெய்யுமாறு பிரதசே செயலகம் உத்தரவு!!

வவுனியா கனகராயன்குளம் எ9 பிரதான வீதியில் அமைந்துள்ள சர்சைக்குரிய தாவுத் உணவகம் அமைந்துள்ள காணியை காலி செய்யுமாறு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் அறிவுறுத்தல் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அரச காணியில் அதிகாரமில்லாமல் ஆட்சிசெய்தல் அல்லது குடியிருக்கிறீர் எனக்கருதுவதால் 1979 ஆண்டின் அரச காணிகள் ஆட்சி மீளப்பெறுதல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 7 மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணியை காலி செய்யும் படியும், அக்காணியை காலியான நிலையில் பிரதேச செயலரிடமோ, அல்லது குடியேற்ற உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தரிடமோ ஒப்படைக்குமாறும் குறித்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − thirteen =

*