;
Athirady Tamil News

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

0

மலையகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு

அண்மையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மலையக உறவுகளுக்கு பல்வேறு உதவிகள் வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வணக்கத்திற்குரிய அருட்கலாநிதி எஸ். சந்திரகுமாரினால் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீவிபத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளும் 13வயதுடைய விஷேட தேவைக்குட்பட்ட சிறுமி ஒருவருக்கு முச்சக்கரநாற்காலியும் திம்புள்ள மேற்பிரிவு தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வைத்து உலர் உணவுப் பொருட்களும் ஹட்டன் பொகவந்தலாவை வானகாடு தோட்ட மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் என்பனவும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − two =

*