;
Athirady Tamil News

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும்!!

0

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தி பினேன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவரி மாளிகையில் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார்.

இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் டப்பிள்யூ.டீ.லக்ஸ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதாக கூறினார்.

அவ்வாறான நிதி நிறுவனங்களில் காணப்படும் முறைக்கேடுகளினால் அரசாங்கம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர், எனவே இது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இயற்றியாவது அல்லது நிதி நிறுவனங்களில் ஏற்படும் ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − eighteen =

*