;
Athirady Tamil News

சுத்தமான நகரை நோக்கி!! (படங்கள்)

0

சுத்தமான நகரை நோக்கி எனும் தொணிப்பொருளில் குப்பை தொட்டிகள் வழங்கல்.

வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் முயற்சியில் நகரின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் வவுனியா காளி கோவில் பகுதியில் 02 தொட்டிகளும், குருமன்காடு பிள்ளையார் ஆலயசந்தியில் 01குப்பைத்தொட்டியும், திருநாவற்குளத்திற்கு 3 தொட்டிகளும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அவற்றை பராமரிப்பதற்கான பொறுப்புகளும் அப்பகுதியை சார்ந்தவர்களிடம் வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வுகளில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கோகிலன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, உப தலைவர் பா.சிவகுமார் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*