;
Athirady Tamil News

மந்துவில் பகுதியில் தீ!!

0

தென்மராட்சி – மந்துவில் பகுதியில் தீ பற்றியதில் பனைகள், தென்னைகள் என்பன எரிந்துள்ளன.

இந்தச் சம்பவம் சற்றுமுன் மந்துவில் சின்னச்சந்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஒருவர் தமது வீட்டுக்காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போது தற்போதைய காற்று காரணமாக குப்பையிலிருந்து பறந்த தணல் பக்கத்து வீட்டாரின் தென்னை, பனை மீது விழுந்து தீ பற்றி பாரிய விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படை தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்கின்றனர். அத்துடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 8 =

*