;
Athirady Tamil News

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேள்விப் பொங்கல் விழா!! (வீடியோ, படங்கள்)

0

பிரசித்திபெற்ற கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த வேள்விப் பொங்கல் விழாவானது கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக இம்முறை பொங்கல் நிகழ்வுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை சனிக்கிழமை(06-06-2020) இடம்பெற்றவுள்ளதாக மேற்படி ஆலய தர்மகர்த்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொங்கல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே நடாத்தப்பட வேண்டுமென்பதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எமது செய்திச் சேவைக்கு விசேடமாக கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை எமது ஆலயத்தில் வேள்விப் பொங்கல் விழாவை நடாத்துவதற்கு வலி.வடக்குப் பிரதேச சபை முன்னர் அனுமதி வழங்கியிருந்த போதும் பொசன் நிகழ்வு காரணமாகப் பின்னர் அனுமதி மறுத்திருந்தது. இதன் காரணமாகவே, இம்முறை வேள்வி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், எதிர்வரும் காலங்களில் வருடாந்த வேள்விப் பொங்கல் சிறப்பாக நடைபெறும் என்றார்.

இதேவேளை, இம்முறை வேள்வி பெரியளவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் வெளியான தகவல்கள் தொடர்பில் வினாவிய போது,

இம்முறை வருடாந்த வேள்வி பெருமெடுப்பில் நடைபெறவுள்ளதாக முகநூல்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விஷமிகள் வெளியிட்டு வரும் கருத்துக்களை எவரும் நம்ப வேண்டாமெனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*