;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுற்றாடல் தினம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுற்றாடல் தின நிகழ்வானது மிக எளிமையாக மரம் நாட்டுதல் செயற்பாட்டுடன் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வருடாந்தம் சுற்றாடல் தின நிகழ்வானது மிக பெரிய அளவில் சாரணர்களினாலும் சுற்றாடல் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்வது வழமை. இம்முறை கொவிட் – 19 காரணமாக மிக அமைதியான முறையில் இடம் பெற்றது. 2020 ஆம் ஆண்டு சுற்றாடல் தின தொனிப்பொருளாக

” இயற்கைக்கான தருணம்”
உயிர்ப்பல்வகைமையை ஏற்படுத்துவோம். எனும் தொனிப்பொருளில் அமைந்தது. கல்லூரியில் சமூக இடைவெளி சுகாதார நடைமுறையை பின்பற்றி குறிப்பிட்ட சிலரே நிகழ்வில் பங்கேற்க முடிந்தது. கல்லூரி அதிபர் உரையை தொடர்ந்து சாரணன் செல்வன் சங்கமனால் சுற்றாடல் தினம் கொண்டாடப்பட வேண்டிய அவசியம் பற்றி குறிப்பிட்டதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*