;
Athirady Tamil News

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். சாவகச்சேரி நகரம், சாவகச்சேரி புகையிரத நிலையம், சாவகச்சேரி தபாலக வீதி, சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரதேசம், சாவகச்சேரி நீதிமன்றப் பிரதேசம், அரசடி- கச்சாய் வீதி, சங்கத்தானை, மீனாட்சியம்மன் கோவில், பெருங்குளம் சந்தி, 190 ஆவது மைல்கல் ஏ-9 வீதி, நுணாவில் வைரவர் கோவில் பிரதேசம், கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் சந்தி, வில்லூன்றி, நாவாந்துறை, முத்தமிழ் வீதி, மீனாட்சிபுரம் பண்ணை சுற்றுவட்ட வீதி, கண்ணகிபுரம், பண்ணை சுகாதாரக் கிராமம், யாழ். சிறைச்சாலை, யாழ். பொலிஸ் நிலையம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*