;
Athirady Tamil News

தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் செயற்படும் சிறீதரன்!! (படங்கள்)

0

இலங்கை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் ஒருவர் தான் பயணம் செய்யும் வாகனத்தில் விளம்பரப் பதாதைகளை (ஸ்டிக்கர்) காட்சிப்படுத்த முடியும் குறித்த வாகனத்தில் வேட்ப்பாளர் இன்றி பயணித்தால் தேர்தல் விதிமுறை மீறிய குற்றமாகும்.

இன் நிலையில் நேற்று மாலை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்ப்பாளருமான சிறீதரன் அவர்களின் படம் ,கட்சி சின்னம் ,விருப்பிலக்கம் ஆகிய பதாதைகளை தாங்கிய வாறு வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வேப்பாளர் இன்றி பயணித்த நிலையில் புளியங்குளம் பகுதியில் பொலிசாரால் மறிக்கப்பட்டு பதாதைகளை நீக்கி விட்டு பொலிசார் அனுப்பி உள்ளனர்.

ஆனால் குறித்த வாகனம் பல நாட்களாக வேட்ப்பாளர் இன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் பயணம் செய்த போதும் கிளிநொச்சி பொலிசார் இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் வினவுவதற்க்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பலனளிக்கவில்லை.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + ten =

*