;
Athirady Tamil News

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உறுதி!!

0

கொரோனா பாதுகாப்பு முன்னுரிமையளித்து சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஆகியோருக்கிடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கொவிட் 19 க்கு எதிராக அரசாங்கம் கடுமையான செயற்பாடுகளை முன்னெடுத்தது தேர்தலுக்காக அல்லவென இதன் போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொவிட் 19 தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னொக்கி கொண்டு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை மக்கள் உணர்ந்து கொள்வதன் ஊடாக மக்களுக்கு எவ்வித அச்சமுமின்றி தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியும் என ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கூறியுள்ளார்.

அத்துடன் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட அனைவரையும் இந்த நடவடிக்கைக்குள் உள்வாங்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரச அதிகாரிகளும் இதில் பங்குபற்றக்கூடியவாறான சட்டரீதியான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சட்டவிதிகளாக உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தேர்தல் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய கொவிட் 19 பரிந்துகைளை வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப தேர்தல் மத்திய நிலையங்களில் இடப் பிரச்சினை தொடர்பான சிக்கல்கள் ஏற்படின் அதற்கு ஒத்துழைப்பு வழங்க இதன் போது ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலுக்காக ஜூலை மாதம் 31 ஆம் ஊருக்கு செல்வோர் மற்றும் தேர்தலுக்கு பின்னர் மீள வரும் மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*