;
Athirady Tamil News

அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்த நீதிமன்றம் உத்தரவு!!

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை செயற்படுத்துமாறே கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் எட்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான முத்துராஜா சுரேந்திரன் கைது பிணையில் உள்ள நிலையில், அவரை அடுத்த தவணை விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதவானால் வௌியிடப்பட்ட பிடியாணையை இரத்துச் செய்யுமாறு கோரி ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் இதன்போது அவர்களுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும், அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜஹான் கார்திய புஞ்சிஹேவா ஆகிய சந்தேகநபர்கள் குறித்த பிடியாணைக்கு எதிராக மேன்முறையீட்டில் வழக்கு தாக்கல் செய்யாததனால் அவர்களைக் கைது செய்யுமாறு வௌியிடப்பட்ட பிடியாணையை அவ்வாறே செயற்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு நீதவானால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*