;
Athirady Tamil News

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

0

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1924 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 26 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 1397 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 516 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + fifteen =

*