;
Athirady Tamil News

சூரிய கிரகணம் – என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது? (வீடியோ)

0

சூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது. இந்த கிரகணம் முழு நெருப்பு வளையம் போன்ற உச்சம் அடையக் கூடிய நேரம் காலை 11.49 மணி என தெரிவிக்கப்படுகின்றது.

கிரகணம் நிறைவடையக் கூடிய நேரம் மதியம் 1.30 மணி என கிரகணம் 3 மணி நேரம் 14 நிமிடம் 24 விநாடிகள் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதுவாகும். அடுத்து டிசம்பர் 14 ஆம் திகதி நிகழும்.

சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக எப்படி பார்க்கலாம்?

2020 ஜூன் 5 ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதை அடுத்து சூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதியும், அதைத் தொடர்ந்து ஜூலை 5 ஆம் திகதி காலை 8.37 மணிக்கு தொடங்குகிறது. காலை 11.22 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. இந்த கிரகணத்தின் உச்ச நிலை காலை 9.59 மணியாக இருக்கும்.

காலையில் கிரகணம் நிகழ்வதால் பெரும்பாலான இடங்களில் அதைப் பார்ப்பது அரிது தான்.

நெருப்பு வளையம்

சூரிய கிரகணம் மூன்று வகைகள் உள்ளன. பகுதி சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், நெருப்பு வளைய கிரகணம் என உள்ளன.

அதில் ஜூன் 21 இல் நிகழ இருப்பது நெருப்பு வளையம் போல தோன்ற உள்ள சூரிய கிரகணம் ஆகும்.

சூரிய கிரகணம் எந்த ராசி, நட்சத்திரத்தினுக்குப் பாதிப்பு?

ஜூன் 21 ஆம் திகதி நிகழும் சூரிய கிரகண நிகழ்வு காலை 10.16 மணி என்பதால் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

அதன் காரணத்தால் மிருகஷீரிடம் நட்சத்திரமும், அதன் முன் மற்றும் பின் உள்ள திருவாதிரை, ரோகிணி நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

அதோடு மிருகசீரிடம் நட்சத்திரம் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நட்சத்திரம் என்பதால் செவ்வாய் பகவான் ஆட்சி செய்யக் கூடிய நட்சத்திரங்களான சித்திரை, அவிட்டம் நட்சத்திரம் ஆகிய நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்வது அவசியம்.

பாதிக்கப்படும் நட்சத்திர பட்டியல்

மிருகஷீரிடம் நட்சத்திரம் – ரிஷபம், மிதுனம்
சித்திரை நட்சத்திரம் – கன்னி, துலாம்
அவிட்டம் நட்சத்திரம் – மகரம், கும்பம்
திருவாதிரை நட்சத்திரம் – மிதுனம்
ரோகிணி நட்சத்திரம் – ரிஷபம்

கிரகணமும் மனித உடலும்:

சூரிய கிரகணம் என்பது எப்படி சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் வருவதால் ஏற்படுகின்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனரோ, அதே போல் நம் உடலாக பூமி பார்க்கப்படுகிறது, ஆத்மாவாக சூரியனையும், மனதை இயக்குபவராகச் சந்திரன் பார்க்கப்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இப்படி உடல், ஆத்மா, மனம் என மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரக் கூடிய நேரம் தான் கிரகண நேரம். அதனால் இந்த கிரகண நேரத்தில் நாம் எதைச் செய்தால் அது பல மடங்கு யோகத்தையும், பலனையும் கொடுக்கக் கூடிய மன நிலையை நம்மில் ஏற்படுத்தும் என்கின்றனர்.

கிரகணத்தால் அதிர்ஷ்டம் அடையக் கூடிய ராசிகள்

இப்படி யோகத்தை அளிக்கக் கூடிய கிரகண நேரத்தில் நாம் வீட்டிலேயே இறைவனை நினைத்து வழிபாடு செய்வது அவசியம்.

இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பது அவசியம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எந்த இறைவனை பிடிக்கின்றதோ அவரை நம் மனதார வணங்கி ஆராதித்தாலே அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.

கிரகண காலத்தின் போது நாம் ஏதேனும் உணவு மற்றும் நாம் ஏதேனும் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் மீது தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களாக இருந்தால் வீட்டிலேயே இறை நாமத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியது

கிரகணம் முடிந்ததும் அனைவரும் வீட்டை சுத்தம் செய்து, குளித்து இறைவனை வணங்க வேண்டும்.

குளிக்கும் போது அந்த தண்ணீரில் படிகாரம் பொடி, இரண்டு கல் உப்பு, மஞ்சள், சிறிது அருகம் புல் போட்டு அதில் குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் நம் உடலிலிருந்து கெட்ட சக்திகள் வெளியேறும்.

பரிகாரம் எப்படி செய்வது?

கெட்ட சக்தியை அழிக்கக் கூடிய துர்க்கை அம்மனுக்கு வெள்ளை மொச்சை வைத்தும், ராகு பகவானுக்கு கருப்பு உளுந்து ஆகியவை வேகவைத்து நைவேத்தியமாக வைத்து தீப, தூபம், அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும்.

காயத்ரி மந்திரம் சொல்லலாம் – ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!

இல்லை என்றால் ஓம் நமோ நாராயணா, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா என்ற எளிய மந்திரங்களை உச்சரித்து உங்களின் பாவங்களை தொலைக்கலாம்.

செய்யக் கூடாத முக்கிய விஷயம்:

கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது. அதே போல் கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் உடலின் எங்கேனும் சொரிந்து கொண்டால் அதே இடத்தில் குழந்தைக்கு கருப்பாக அடையாளம் தோன்றும் என நம்பப்படுகிறது.

கிரகண நேரத்தில் கண்டிப்பாக தம்பதிகள் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. வீட்டை சுத்தம் செய்தலும் கூடாது.

கிரகணத்தின் போது கண்டிப்பாக நாம் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான கோளாறு வயிறு சார்ந்து பிரச்சினைகள் ஏற்படும் எனவும் சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eleven =

*